
2.0 படத்தை தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி படம் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தனக்கு நடிக்க தெரியாது என ஓரங்கட்டிய தமிழ்சினிமாவில் தான் ஒருபோதும் நடிக்கக்கூடாது என்றிருக்கும் வித்யா பாலன், இந்த படத்துக்கும் நோ சொல்லிவிட்டாராம்.
எனவே தற்போது தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இவர் பாலிவுட் நடிகை என்பதெல்லாம் தாண்டி தற்போது ஹாலிவுட் நடிகையாக வலம்வருகிறார்.