
ரஜினிகாந்த் எப்பவும் ஒரே வார்த்தை தான் சொல்லுறதை தான் செய்வார் செய்யுறதை தான் சொல்லுவார் இப்பவும் அதை சொல்லி இருக்கிறார் அவரின் அரசியல் பிரவேசம் பற்றி அவர் அரசியல் வருவது ஆண்டவன் கையில் தான் உள்ளது நேரம் வரும் பொது அவர் அரசியலுக்கு வருவாராம் கடந்த 21 வருடங்களாக அவருக்கு நேரம் வரவில்லை இனி வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன என்று சில சமயம் வெறுத்து போகிறது, ரஜினிகாந்த் அண்ணன் காலையில ரஜினி விரைவில் அரசியல் வருவார் என்று சொல்லுகிறார் மாலை நாம் அப்படி சொல்லவே இல்லை என்று சொல்லுகிறார் அவருக்கு ரஜினிகாந்த் நான் நேரம் வரும் பொது வருகிறேன் என்று சொல்லுகிறார் சாமி மண்டை குழம்புகிறது சரி ரஜினிகாந்த் சொன்னதை பார்ப்போம்
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு ‘காலா’ என பெயரிட்டுள்ளார்கள். நாளை (மே 28) முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து மும்பைக்கு பயணமானார் ரஜினி.
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ரஜினியிடம் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு “நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்” என்று பதிலளித்தார்.
‘காலா’ படத்தில் ரஜினியோடு நடிக்க ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.