Friday, January 17
Shadow

அரசியலில் ரஜினிக்கு வெற்றி : தெலுங்கு பஞ்சாங்கம் கணிப்பு

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி விளம்பி நாம வருட பஞ்சாங்கம் நேற்று ஆந்திரா, தெலுங்கானாவின் முக்கிய கோவில்களில் அந்தந்த கோவில் தலைமை அர்ச்சகர்களால் வாசிக்கப்பட்டது. வரும் ஆண்டில் மழை எப்படி இருக்கும், இயற்கை பேரழிவு ஏற்படுமா? என்பது குறித்து கணித்துச் சொல்வார்கள். இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சி.

நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் காளகஸ்தி சிவன் கோவில் அர்ச்சகர் பஞ்சாங்கத்தை படித்தபோது கூறிய அரசியல் தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வருகிற பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, பீகார் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு கணிசமாக குறையும்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க வெற்றி பெறாது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகராவ் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அவரே மீண்டும் முதல்வர் ஆவார்.

தமிழக அரசியலில் ரஜினி வெற்றி பெறுவார்.

இவ்வாறு தெலுங்கு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதாக அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.