Friday, January 17
Shadow

இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை – ரசிகர்கள் வருத்தம்

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினி, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இயக்குனர் பா.இரஞ்சித் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காலா என்ற கரிகாலன் படத்துக்கான கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்றும், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு கரிகாலன் என்ற தலைப்பை தான் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அனுமதில்லாமல் ‘காலா என்கிற கரிகாலன்’ என்ற தலைப்பில் படம் தயாரித்திருப்பதாகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகர் ரஜினி, வொண்டர்பார் நிறுவனம், இயக்குனர் பா.இரஞ்சித் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply