
தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழ், தெலுங்கில் நடித்த வரும் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
முன்னதாக, தமிழில் இவர் நடித்த எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாகி விட்டார் ராகுல் ப்ரீத் சிங். அதோடு, சமந்தாவும் திருமணத்துக்கு தயாராகி விட்டதால் அவருக்கான வாய்ப்புகளெல்லாம் ராகுல் ப்ரீத் சிங்கிற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால், தெலுங்கில் வெகுவிரைவில் நம்பர்-ஒன் நாற்காலியில் உட்கார்ந்து விடும் நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங்.
இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த அவரை கதையோடு கலந்த ஒரு முக்கியமான கேரக்டரில் பயன்படுத்தப்போகிறாராம் மிஷ்கின்.
அந்த வகையில், துப்பறிவாளனாக நடிக்கும் விஷாலுக்கு உதவி செய்யும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறாராம். அதனால் இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பில் இருந்தே அவரும் கலந்து கொண்டு நடிக்கிறாராம்.