
விஷாலுடன் பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அரோல் குரலி இசையமைத்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது.
இப்படத்தின் தொடக்கத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கான ‘துருவா’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ்பாபு இணைந்திருக்கும் படம் ஆகியவற்றில் நாயகியாக நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங்.
இவ்விரண்டு படங்களுக்கு தேதிகள் ஒதுக்கி நடித்து வருதால், ‘துப்பறிவாளன்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. இதனால் படத்தில் இருந்து விலகியிருக்கிறார்.
ராகுல் ப்ரீத் சிங் விலகலைத் தொடர்ந்து அனு இம்மானுவேலை நாயகியாக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ‘துப்பறிவாளன்’ படத்தின் பேச்சுவார்த்தைக்காக அனு இம்மானுவேல் சென்னை வந்து சென்றிருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தேதிகள் ஒதுக்குவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகனாக நடித்து தயாரிக்க இருக்கிறார் விஷால்.