Friday, March 13
Shadow

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்களா. சூர்யா, கார்த்தி ஹீரோயின் பேட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற அவர் பேட்டி அளித்துள்ளார்.

நான் இயற்கையாகவே கடின உழைப்பாளி. நான் எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியை கற்பது என் கடமை. தெலுங்கு திரையுலகில் பணியாற்றத் துவங்கியதும் அந்த மொழியை கற்கத் துவங்கிவிட்டேன்

நான் ஒரு தென்னிந்திய நடிகை. நான் வடக்கில் இருந்து வந்ததாக மீடியாக்கள் சிலசமயம் கூறுவது வேதனையாக உள்ளது. நான் ஒரு தெலுங்கு அம்மாயி. தெலுங்கு பேசுபவர்களை எங்காவது பார்த்தால் உடனே நானும் தெலுங்கில் பேசுகிறேன்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம் அதில் மசாலா இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் மிக்க உலகம். இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்.

இதுவரை நான் அப்படி பட்ட விஷயம் எதுவும் ஆகவில்லை இதுவரை யாரும் என்னிடம் அப்படி நடக்கவில்லை. சினிமா என்றாலே மக்களுக்கு ஒரு வித தவறான உணர்வுகள் அது தான் இப்படி நினைக்கத்தோணுது