
ரெஜினா திரைவிமர்சனம்
இந்த வார ரிலீஸ் ரெஜினா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் என்று தான் சொல்ல வேண்டும் அதனால் தான் படத்தின் டைட்டில் ரெஜினா ரெஜினாவாக நடித்திருக்கிறார். பாவா செல்லதுரை விவேக் பிரசன்னா ரித்து நிவாஸ் ஆதித்தன் தீனா மற்றும் பலர் நடிப்பில் டொமைன் டி சில்வா இயக்கத்தில் சதீஷ் நாயர் இசையில் வெளிவந்திருக்கும் படம் ரெஜினா
தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்த திரைக்கதை தான் கணவனை கொலை செய்து விடுகிறாகள் அதற்கு நீதி கேட்டு போராடுகிறாள் நீதி கிடைக்கவில்லை இதனால் அவர்களை பழி வாங்குகிறார் இதுதான் படத்தின் ஒன் லைன்
படத்தின் இயக்குனர் டொமின் டி செல்வா இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான திரைக்கதையை கொடுத்து விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் விறுவிறுப்பான திரைக்கதை இருந்தும் படத்தில் தொய்வு ஏற்படுகிறது காரணம் கதாபாத்திரங்களின் கார்த்தி அமைப்பு படத்திற்கு சிறப்பாக இல்லை பல காட்சிகள் மிக நீளமாக இருப்பதினாலும் பல இடங்களில் பல குழப்பங்கள் செய்ய ஏற்படுவதால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது இயக்குனர் பல இடங்களில் கதையை விட சதையை அதிகமாக நம்பி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அதிகமான கிளாமர் காட்சிகளும் சில இடங்களில் இது வேறுபடமா என்று தோன்றி வைக்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கிறது
படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது சுனைனா நடிப்பு அற்புதமான ஒரு நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். ஒரு நல்ல ஆக்சன் நடிகை என்பதை சுனைனா இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார்.
பாவா செல்லதுரை டேனியல் போன்றவர்களின் நடிப்பு படத்திற்கு கொஞ்சம் பலத்தை சேர்த்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்
படத்திற்கு மிகப்பெரிய வளம் படத்தின் இசையமைப்பாளர் சதீஷ் நாயர் பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதமான பாடல்களாக கொடுத்திருக்கிறார் அதைக்கேற்ப ஒரு நல்ல இசையை கொடுத்து இருப்பதற்கு பாராட்டலாம்
மொத்தத்தில் ரெஜினா பொம்மை Rank 2/5