தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் மிக பெரிய நடிகை என்ற அந்தஸ்தை கவர்ச்சி மூலம் இடம் பிடித்தவர் ரெஜினா தமிழில் இப்படி தான் நடிப்பேன் அப்படி தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்ட ரெஜினா தெலுங்கில் கவர்ச்சி மட்டுமே பிரதானம் என்று இருந்தவர் அங்கு மார்கெட் அவுட் என்று தெரிந்ததும் தமிழ் பக்கம் திரும்பயுள்ளர். உதயநிதி அடுத்ததாக மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்தை இவரே தயாரிக்கவும் உள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் வரும் கிருஸ்துமஸில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளார். மேலும் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.