Tuesday, April 22
Shadow

றெக்க- திரைவிமர்சனம்(சும்மா விறு விறுன்னு இருக்கு Rank 5/3.5)

விஜய் சேதுபதி. கே.எஸ்.ரவிகுமார். ஹரீஷ் உத்தமனுக்கும் கபீர் துஹான் சிங், கிஷோர் லக்ஷ்மி மேனன், சதீஷ், மற்றும் பலர் நடிப்பில் இம்மன் இசையில் ரத்தினசிவா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் கமர்சியல் மசாலா படம் தான் றெக்க முதல் முயற்சி விஜய்சேதுபதிக்கு அதாவது கமர்சியல் ஹீரோ ஆசை ஆசையை சிறப்பாக செய்து இருக்கும் விஜய்சேதுபதி .சரி கதையை பாப்போம்.

எப்பவும் போல மதுரை வெட்டு குத்து என்று ஆரம்பிக்கும் என்று பார்த்தல் அமைதியாக கும்பகோணத்தில் கதை ஆரம்பம் கபீர் துஹான் சிங் ஹரீஷ் உத்தமனுக்கும் முன்விரோதம் சொத்து தகராறு அதுமட்டும் இல்லாமல் யார் பலசாலி என்பதிலும் போட்டி இவங்க ரெண்டுபேருக்கும் இடையில் அப்பாவியாக மாட்டி கொள்ளும் விஜய் சேதுபதி இதில் இருந்து எப்படி விடு பெறுகிறார் என்பது தான் ஒன் லைன் கதை

கும்பகோணத்தில் அமைதியாக, தெரிந்த / தெரியாதவர்களின் காதலுக்கு உதவும் வக்கீல் சிவாவாக, விஜய் சேதுபதி. அவரது அமைதியான அப்பாவாக கே.எஸ்.ரவிகுமார். வில்லன் ஹரீஷ் உத்தமனுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு காதல் பிரச்னையில் வாய்க்கா தகராறு.

யார் காதலித்தாலும் அவர்களுக்கு உதவி செய்பவர் விஜய் சேதுபதி அப்படி உதவி செய்ய போய் மாட்டி ஹரிஸ் உத்தமனிடம் மாட்டி கொள்ளும் விஜய் சேதுபதி

ஒரு சின்ன டாஸ்மாக் சண்டையில், விஜய் சேதுபதிக்கு, ஹரீஷ் உத்தமனோடு மீண்டும் ஒரு வரப்பு தகராறு. ஆனால் அடுத்தநாள் அதிகாலையில் தங்கை திருமணம் இருப்பதால், ‘பிரச்னை வேண்டாம் நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்’ என்கிறார் . ஹரீஷோ, ‘என் பரம வைரி கபீர் துஹான் சிங் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணை மதுரையிலிருந்து கடத்தி வா.. இல்லையென்றால் மண்டபத்தைச் சுற்றி இருக்கும் என் ஆட்கள் கல்யாணத்தில் புகுந்து கலாட்டா செய்வார்கள்’ என்று மிரட்டுகிறார். அந்தப் பெண்தான் லக்‌ஷ்மி மேனன்.

மதுரைக்குப் போய், அத்தாம் பெரிய அரசியல்வாதி பெண்ணான லக்‌ஷ்மி மேனனை தூக்கும் சிவா, சும்மா ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு விடலாம் என்று பார்த்தால் விடாது கருப்பாய் தொடர்கிறது தொல்லைகள். கடத்தியவர் நேரே கோவைக்கு வருகிறார். அங்கேதான் தாடி வில்லன் கபீர் இருக்கிறார். அங்கே லக்‌ஷ்மி மேனனை கைமாற்றி விட்டாரா.. இல்லை கை பிடித்தாரா என்பது தான் கதை

எப்பவும் போல தன் பங்கை உணர்ந்து நடித்துள்ளார் விஜய்சேதுபதி கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும் மதல் முயற்சி அருமையாக செய்துள்ளார் சண்டை காட்சிகளும் சரி பஞ்ச் வசனங்களும் அலட்டி கொள்ளாமல் பேசியுள்ளார் சும்மா கத்தி கூச்சல் போட்டு அலட்டாமல் அமைதியாக அழகாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும் முதல் முறை விறு விறு பாடலுக்கு நல்ல நடனமும் ஆடியுள்ளார் என்று சொல்லணும் படத்துக்கு முக்கிய பங்கு விஜய் செதுபதிதான் அவர் இல்லையென்றால் கொஞ்சம் படம் டல் அடிதிருக்கும்

படத்துக்கு மிக பெரியபலம் என்றால் அது இம்மான் இசை படத்துக்கு பெரிய பலம் என்று சொல்லணும் அடுத்து படத்துக்கு வசனம் இயக்குனர் வசனம் செமையா எழுதி இருக்கிறார் குறிப்பாக ட்ரைலர் பார்த்து இருபிங்க காப்பு போட்டவன் தான் அடிப்பான கையறு கட்டுனவன் எல்லாம் அடிக்கமாட்டன என்று பேசுவது அதேபோல்பல இடங்களில் வசனம் பேசுகிறது படத்தில் இயக்குனர் முதல் முத்திரை பதித்துள்ளார் என்று தான் சொல்லணும் படத்தின் திரைகதை படத்தின் டைட்டில் பல சும்மா விறு விறுன்னு இருக்கு

கே.எஸ்.ரவிகுமார் ஹரீஷ் உத்தமனுக்கும் கபீர் துஹான் சிங், கிஷோர் கதாபாத்திரம் படத்துக்கு மேலும் பலம் சேர்க்கிறது என்று தான் சொல்லணும்

படத்தில் குறை என்று சொன்னால் பெரிதாக ஒன்றும் இல்லை குடுபதொடு எல்லோரும் ரசிக்கும் படமாக அமைந்துள்ளது .
மொத்தத்தில் படம் சும்மா விறு விறுன்னு இருக்கு

Leave a Reply