ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனினும் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கபாலி படத்தை ஒரு வாரத்திற்குள் பார்த்தவர்களின் எண்ணிக்கையில் 90% பேர் ரெமொ படத்தை பார்த்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.