பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மெகா படம் ரெமோ. அருண்ராஜ்-நர்ஸ் ரெமோ என இரண்டுவிதமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் டாக்டர் காவ்யாவாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அக்டோபர் 7-ந்தேதி இந்த படம் திரைக்கு வரவிருப்பதால் இப்போது படத்திற்கான பிரமோஷன்களை முடுக்கி விடத் தொடங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில், ஏற்கனவே தமிழகத்தில் அவ்வப்போது ரெமோ சம்பந்தப்பட்ட விளம்பரங்களை செய்து வந்தவர், இன்று அக்டோபர் 1-ந்தேதி மலேசியாவில் ஒரு பிரமாண்ட பப்ளிசிட்டியை செய்கிறார்கள். சுமார் 3 ஆயிரம் மக்கள் கூடும் அரங்கில் அந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ரெமோ படம் சம்பந்தப்பட்ட சில விசயங்களை வெளியிட்டு மக்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் இருவரும் கலந்து கொண்டு ரெமோ படத்தின் சுவராஸ்ய அனுபவங்களை மலேசிய தமிழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்களாம்.