
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் உள்ளது அந்த இடத்தையும் தாண்டி இன்னும் கொஞ்சம் உயர்ந்து உள்ளார் சிவா ரெமோ படம் மூலம் எப்பொழுதும் இருக்கும் எதிர் பார்ப்பை விட இந்த முறை பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகம் ரெமோ படத்திற்கு..,
இதை நிரூபிப்பதுபோல் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர்.
ஜப்பான் நாட்டில் உள்ள Nagoyachaya என்ற நகரில் இதுவரை ரஜினி படம் மட்டுமே ரிலீஸ் ஆன நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வும் ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் ஜெர்மனியில் ‘ரெமோ’ திரைப்படம் 15 திரையரங்குகளில் 17 காட்சிகளுக்கும் அதிகமாக திரையிடப்படவுள்ளது. தமிழ் படம் ஒன்று ஜெர்மனியில் அதிக காட்சிகள் திரையிடப்படுகிறது என்பது ரிலீசுக்கு முன்பே இந்த படம் செய்த சாதனையாக கருதப்படுகிறது.