தமிழ் சினிமாவில் இப்போது அனைவரின் பார்வையும் சிவகார்த்திகேயனின் ரெமோ படம் மீது தான் உள்ளது. படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.
இந்த படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. அண்மையில் தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த அவர் இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று கூறி, படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறாராம்.
இவர் இதற்கு முன் விஜய்யின் தெறி, தெலுங்கில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது .