Thursday, February 9
Shadow

ரெமோ – திரைவிமர்சனம் (மகிழ்ச்சி RANK 5/4.2)

‘ரெமோ’ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், சதீஷ் ,சரண்யா, ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப்பாளர் அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நல்லா படிக்கும் மாணவன் ஆனால் அவருக்கு படிப்பை விட நடிப்பில் தான் ஆர்வம் வகுப்பில் முதல் மாணவனாக இருக்கும் சிவா நடிப்புக்காக தன் படிப்பை தியாகம் செய்கிறார் வேணும் என்றே மார்க் குறைவாக வாங்கி பத்தாம் வகுப்பில் பெயில் ஆகிறார். ந்சிநேமா வாய்ப்பு தேடி தேடி வெறுத்து பொய் நாடக கம்பனில் சேருகிறார் அங்கு அவருக்கு ஹீரோ வேடம் ஆனால் காதல் காட்சிகள் வந்தால் பயம் வந்து சொதுப்புவார்.அந்த சமயத்தில் இயக்குனர் K.S.ரவிக்குமார் புதுமகம் தேடுகிறார் என்று சொல்ல்ஸ் அங்கு தேர்வுக்கு போகிறார் சிவா மற்றும் சதீஷ் K.S.ரவிக்குமார் நடித்து காண்பிக்க சொல்லும் பொது எப்பவும் போல சொதப்பல் செய்ய K.S.ரவிக்குமார் வெறுத்து இவன் போ மாட்டன் நான் போறேன் என்று போக ஆனாலும் சிவா தன் முயற்சியை விடவில்லை பெண் வேடம் போட்டு K.S.ரவிக்குமார் முன்னாடி பொய் நிற்க அவரின் படத்துக்கு அதாவது அவரின் கதைக்கு ஏற்ற மாதிரியே இருக்க அவர் உடனே ஒரு காதல் காட்சி சொல்லி நடிக்க சொல்லுகிறார். அதையும் சொதப்ப இயக்குனர் கோவத்தில் வெளியே போக சொல்ல அங்கு இருந்து வெளி வர நல்ல வாய்ப்பை விட்டு விட்டாய் என்று சொல்ல அப்ப சிவா அவர் சொன்ன காட்சி சும்மா வருவதில்லை காதல் என்றால் அப்படி எல்லாம் சும்மா வராது நம்ம மனசுக்குள் வரணும் அப்பா தான் அந்த பீல் வரும் என்று சொல்லும் போது கீர்த்தி என்ட்ரி K.S.ரவிக்குமார் சொன்ன காட்சி போல நடக்க படத்தின் முக்கிய கதை ஆரம்பம் ஆகிறது

கண்டதும் காதல் என்று இவள் தான் வருங்கள மனைவி என்று முடிவெடுக்கிறார் அவளிடம் தன் காதலை சொல்ல அவள் வீட்டுக்கு வருகிறார் அந்த நேரம் கீர்த்திக்கு நிச்சயம் நடக்க மூடு அவுட் ஆகிறார் சிவா K.S.ரவிக்குமார் படத்துக்காக போட்ட பெண் நர்ஸ் வேடத்தில் பஸ்யில் வருகிறார் அந்த நேரம் யோகி பாபு தன் காதலை சிவாவிடம் தாவது நர்ஸ் ரெமோ விடம்காலட்ட பண்ணுகிறார் . அதை பார்த்த கீர்த்தி சுரேஷ் கோவம் வந்து அங்கே பொய் தட்டி கேக்குறார் இதன் மூலம் பெண் சிவாக்கும் கீர்த்திக்கும் நட்பு ஏற்பட கீர்த்தி ஏன் சோகமாக இருகிறிங்க என்று கேக்க உங்களுக்கு வேலை இல்லையா என்று சொல்ல ஓகே நீங்க நாளைக்கு நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு வாங்க உங்களுக்கு வேலை வாங்கி தர்றேன் என்று சொல்ல சிவா அந்த பெண் வேடத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார்.

சிவாவின் நண்பர்களான சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரனிடம் நான் இந்த நர்ஸ் வேடத்தில் சென்று அவள் மனதை கலைத்து என்னை அவளுக்கு பிடிக்க வைத்து காதல் செய்து கல்யாணம் பண்ணுறேன் என்ற சாவல் விட்டு தன் முயற்சியில் இறங்குகிறார் இதில் வெற்றி பெற்றார இல்லை தோல்வி அடைந்தாரா என்பது தான் மீதி கதை

கதையின் முதல் பகுதி போகும் நேரமே தெரியாமல் போகுது செம விறுவிறுப்பு மற்றும் காமெடி காதல் இப்படி செம ஜாலி யாக செல்கிறது படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் விறுவிறுப்பு என்று சொல்லணும் செண்டிமெண்ட் ககாதல் சண்டை இப்படி பல விதத்தில் கதையின் களம் அமைத்துள்ளார் இயக்குனர் பாக்கியராஜ் மொத்தத்தில் படம் முழுக்க செம ஜாலியாக காதலும் காமெடி என்று திரைகதையில் அசத்தியுள்ளார் இயக்குனர் பாக்கியராஜ்

சிவகார்த்திகேயன் கமலின் ஒரு 5௦சதவிகிதம் ரஜினியின் 5௦சதவிகிதம் இப்படி இருவரையும் கலந்து கொடுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது அருமையான நடிப்பு சண்டை காதல் நடனம் இப்ப காட்சியிலும் காண கச்சிதமாக நடித்துள்ளார் அதுவும் பெண் வேடத்தில் செமையாக இருக்கிறார் கவர்ச்சி கன்னி போலவே இருக்கிறார். சில சமயம் கீர்த்தியை விட இவரை நம்மக்கு பிடிக்கும் அந்த அளவுக்கு பெண் வேடத்தில் கலக்கிருகிறார்.

நடிப்பிலும் சிவாக்கு மிக பெரிய போட்டியாக கீர்த்தி சுரேஷ் என்று தான் சொல்லணும் அழகுனா அப்படி ஒரு அழகு என்று சொல்லணும் நடிப்பிலும் நல்ல தேர்ச்சி தனக்கு கொடுத்து இருக்கும் கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்துள்ளார் இந்த படத்துக்கும் கதைக்கும் இவரை தவிர வேறுயாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் இதற்க்கு இயக்குனருக்கு சபாஷ் போடணும்

படத்தின் அடுத்த பலம் படத்தின் இசை அருமையான பாடல்கள் மற்றும் பின்னனி இசைகோர்வையும் நிச்சயம் அனிருத்தை பாராட்டியே ஆகணும்

அடுத்த மிக பெரிய பலம் ஒளிபதிவாளர் P.C. ஸ்ரீராம் சென்னையை இவ்வளவு அழகாக காண்பிக்க முடியும் என்றால் அது P.C. ஸ்ரீராம் தான் படம் முழுவதும் பிரமாண்டம் அந்த பிரமாண்டத்துக்கு தேவையான ஒளிப்பதிவு அருமை

என்ன தான் சிறந்த தொழில் நுட்ப கலைஞ்கர்கள் கிடைத்தாலும் அதற்கான கதையமைப்பும் நடிகர்களும் இருந்தால் தான் அதற்கான அழுகு கிடைக்கும் அந்த வகையில் இந்த படம் ஒரு மிக இச்றந்த படம் என்று தான் சொல்லணும் அரங்கத்துக்குள் சென்று திரும்ப வரும் பொது மனதுக்குள் சந்தோசம் கரை புரண்டு ஓடும்.

ரெமோ கண்ணனுக்கு குளிர்ச்சி செவிக்கு இனிமை மனதுக்கு மகிழ்ச்சி RANK 5/4.2

சிவாகார்த்திகேயனுக்கு ரெமோ நிச்சயம் வசூல் மட்டும் இல்லை மக்களிடம் மகுடம் கிடைக்கும் என்பதில் என்பதில் மாற்றம் இல்லை

Leave a Reply