இறுதி சுற்று படத்துக்கு பிறகு ரித்திகா சிங் நடிக்கும் படம்ல் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை பல படங்கள் வாய்ப்பு வந்தாலும் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறார் .விஷால் நடித்த மருது படத்திற்கு பிறகு கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.அன்பு செழியன் தயாரிக்கும் படம் ஆண்டவன் கட்டளை. காக்கா முட்டை மணிகண்டன் இயக்குகிறார். காக்காமுட்டை, குற்றமே தண்டனை படங்களுக்கு பிறகு மணிகண்டன் இயக்கும் பக்கா கமர்ஷியல் படம். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார், கே.இசை அமைக்கிறார்.
விஜய் சேதுபதி ஹீரோ. ஐ.டி.துறையில் பணியாற்றுபவராக நடிக்கிறார். இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கணையாக நடித்த ரித்திகா சிங் இதில் துணிச்சலான ஒரு பத்திரிகை நிருபராக நடிக்கிறார். ஒரு மிகப்பெரிய குற்றத்தை துப்பறிந்து கண்டுபிடிக்கிற புலனாய்வு பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.
பிளாக் காமெடி வகையிலான படம். விஜய்சேதுபதி, ரித்திகா சிங் இரண்டு கேரக்டர்களை சுற்றி நடக்கிற கதை. படத்தின் பாடல்கள் அனைத்தும் கதையோடு ஒட்டிய பின்னணி பாடலாக (மாண்டேஜ்) அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பாடல்கள் வெளியிடப்பட இருக்கிறது