Saturday, January 17
Shadow

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே”  முதல் சிங்கிள் பாடல்!!

ராக்ஸ்டார் அனிருத் ஒரு பாடலை வெளியிட்டார்னா… அது சாதாரண விஷயமா?

அதே மாதிரி தான், With Love படத்திலிருந்து வந்திருக்கிற “ஐயோ காதலே” முதல் சிங்கிள் இப்போவே கவனம் ஈர்த்துடிச்சு.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த், MRP Entertainment இணைந்து வழங்குற இந்த படத்தை பசிலியான் நாசரேத் – மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிச்சிருக்காங்க. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துல கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் ஜோடியாக நடிக்கிறாங்க.
இந்தப் பாடல் வந்ததுமே, நம்மை நேரா பள்ளி கால காதல் நினைவுகளுக்கே கூட்டிட்டு போயிடுது. பெரிய அலங்காரம் இல்லாம, ஜாலியா, மனசுக்குள்ள ஒட்டிக்கிற மாதிரி ஒரு ஃபீல்.
ஷான் ரோல்டன் இசையில இந்த மெலடி ரொம்பவே சாப்ட்டா மனசை தொடுது. மோகன் ராஜன் எழுதிய வரிகளுக்கு, விஜய்நரேன் குரல் கூட சேர்ந்து பாடலை இன்னும் ஸ்பெஷலா மாற்றியிருக்குது.
இந்தப் பாடலை ராக்ஸ்டார் அனிருத் தன்னோட சமூக வலைத்தளத்துல அதிகாரப்பூர்வமா வெளியிட்டு, படக்குழுவுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கார்னு சொன்னாலே, பாடலுக்கு கிடைக்குற வரவேற்பை புரிஞ்சுக்கலாம்.
With Love படம் முழுக்கவே இன்றைய இளைஞர்களை டார்கெட் பண்ணி, சிம்பிளான ஆனால் மனசை தொடுற காதல் கதையா உருவாகிட்டு இருக்கு. ‘லவர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்கள்ல இணை இயக்குநரா பணியாற்றிய மதன் இந்த படத்தை இயக்கியிருக்கார்.
MRP Entertainment-க்கு இது இன்னொரு முக்கியமான படம். Good Night, Lover, இந்த வருஷ பிளாக்பஸ்டர் Tourist Family – இந்த ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு வர்ற படம் என்பதால எதிர்பார்ப்பு ஜாஸ்தி. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குறதும் கூடுதல் பலம்.
படத்துக்கான டெக்னிக்கல் டீமும் கவனிக்க வைக்கும் வகையில இருக்கு.
ஒளிப்பதிவு – ஷ்ரேயாஸ் கிருஷ்ணா
எடிட்டிங் – K. சுரேஷ் குமார்
கலை இயக்கம் – ராஜ்கமல்
உடை வடிவமைப்பு – ப்ரியா ரவி
மொத்தத்துல,
“ஐயோ காதலே” – கேட்டவுடனே மனசு லைட்டா ஆகுற, சிரிப்போட சேர்ந்து காதல் ஞாபகங்களை தூண்டும் ஒரு ரொமான்டிக் மெலடி.
With Love படம் இளைஞர்களுக்கான ஒரு அழகான காதல் அனுபவமா உருவாகும் அப்படின்னு இந்த முதல் சிங்கிளே சொல்லிடுது.