ஹரி விக்ரம் கூட்டணியில் வெளிவந்த படம் சாமி இந்த படம் மிக பெரிய வெற்றியடைந்தது இதற்கு அப்புறம் இந்த கூட்டணி இணைந்த படம் அருள் இந்த படு தோல்வி அடைந்தது மீண்டும் இந்த கூட்டணி எப்ப இணையும் மீண்டும் ஒரு மாஸ் வெற்றி கொடுப்பார்கள் என்று காத்துகொண்டு இருந்த நேரத்தில் ஹரி சூர்யாவுடன் கை கோர்த்து இதுவரை ஐந்து படங்கள் இந்த ஐந்து படமும் மாபெரும் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஹரி விக்ரம் கூட்டணி எப்ப இணையும் என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு இருமுகன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சாமி – 2 விரைவில் என்று ஹரி அறிவித்தார். இந்த அறிவிப்பு சிங்கம் 3 ரிலீஸ்காக காத்ஹு இருந்த ஹரி படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சாமி – 2 வேலையை ஆரம்பித்துவிட்டார் .
சிங்கம் மூன்றாம் பாகம் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குனர் ஹரி. அவர் அடுத்து சாமி இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளார்.
முதல் பாகத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். விக்ரம்-திரிஷாவுக்கு திருமணம் நடந்துவிட்டதால் இரண்டாம் பாகத்தில் அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது என கூறப்படுகிறது.
இந்நிலையில் சிங்கம் 2, 3 போல சாமி 2விலும் வேறு ஹீரோயினை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஹரி.
ராகுல் ப்ரீத் அல்லது மெட்ராஸ் பட ஹீரோயின் கேத்ரின் இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறது.