
விஸ்வாமித்திரர் தவத்தை கலைத்து அவருடன் தேவ மங்கை மேனகா உறவு கொள்ள பிறக்கும் குழந்தை சகுந்தலா (சமந்தா). பூமியிலேயே குழந்தையை விட்டு இந்திரலோகம் செல்கிறாள் மேனகை. கண்ட மஹரிஷி என்பவர் காட்டில் அக்குழந்தையை கண்டெடுத்து வளர்க்கிறார். வன விலங்குகளை வேட்டையாடி மக்களை காக்க காட்டுக்கு வரும் துஷ்யந்தன் ( தேவ் மோகன்) வளர்ந்து ஆளான சகுந்தலையை கண்டு காதல் கொள்கிறான், அவளை காந்தர்வ திருமணமும் செய்துக் கொள்கிறான். சகுந்தலா கர்ப்பமாகிறாள். நாடு சென்று திரும்ப வந்து அழைத்துச் செல்வதாக விடை பெற்றுச்செல் கிறான் துஷ்யந்தன். இந்நிலை யில் கண்ட மகரிஷியை காண வரும் துர்வாசர் முனிவரை (மோகன்பாபு) சகுந்தலா கவனிக் காமல் துஷ்யந்தன் ஞாபகமாகவே இருக்கிறாள். அதைக்கண்டு கோபம் அடையும் துர்வாசர் சகுந்த லைக்கு சாபம் விடுகிறார். நீ யாரை நினைத்து என்னை அவமதித்தாயோ அவன் ஞாபக்கத்தில் நீ இல்லாமல் போவாய் என்று சபிக்கிறார். துஷ்யந்தனை தேடி அவனை காண அரண்மனைக்கு செல்கி றாள் சகுந்தலா. ஆனால் அவளை மறந்த துஷ்யந்தன் விரட்டியடிக் கிறான். மீண்டும் துஷ்யந்தன் சகுந்தலா எப்படி இணைகிறார்கள், சகுந்தலையின் சாபம் எப்படி நீங்கியது என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
சாகுந்தலம் என்பது காளிதாசன் எழுதிய நாடக நூலாகும். இதன் மையக் கரு வியாச மகாபாரத்தி லிருந்து எடுக்கப்பட்டது. அந்த புராண கதையைத்தான் இயக் குனர் குணசேகர் சாகுந்தலம் என்ற பெயரில் திரைப் படமாக உருவாக்கியிருக்கிறார்.
சகுந்தலையாக சமந்தா நடிக்க துஷ்யந்த மகாராஜாவாக தேவ் மோகன் நடித்திருக்கிறார். பான் இந்தியா படங்கள் வந்துக்கொண் டிருக்கும் நிலையில் ஒரு புராண கதையை திரைப்படமாக்குவதும் அதையும் இலக்கிய தமிழில் வசனங்கள் பேச வைத்து இயக்கு வதும் ரொம்பவே கஷ்டம். அதை பெருமளவுக்கு வெற்றிகரமாக இயக்கி முடித்திருக்கிறார் குணசேகர்.
சமந்தாவும் பொறுமையை கடை பிடித்து சகுந்தலாவை கண்முன் நிறுத்த ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார். வெள்ளை உடையில் மகரிஷி மடத்து பெண்ணாக அவர் உலவுவதற்கு வண்ண மயில்கள், வெள்ளை புலி, மான் கூட்டங்கள் என கிராபிக்ஸ் உலகம் ரொம்பவே கைகொடுத்த திருக்கிறது.
சமந்தாவும் தேவ் மோகனும் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே காதல் கொள்வது அடுத்த ஓரிரு சந்திப்பில் காந்தர்வ திருமணம் செய்வது என காட்சிகள் வேகமாக நகர்கின்றன.
காளிதாசனின் சாகுந்தலம் கதையை படித்தவர்களுக்கு இதில் உள்ள நிறை குறைகள் தெளிவாக தெரிந்தாலும் திரைப்படமாக்கு வதன் சிரமம் தெரிந்து கண்டு கொள்ள மாட்டார்கள் எனலாம்.
துஷ்யந்தனை சந்தித்து தனது நிலையை எடுத்துக்கூற அரச வைக்கு சமந்தா வரும் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கலாம். அந்த அரண்மனை, பிரமாண்ட சிலைகள் பாகுபலி அரங்குகளை ஞாபகப்படுத்து கின்றன.
சமந்தாவுக்கு காதல் பரிசாக மோதிர சின்னம் அணிவது அது தொலைந்துபோவது, பிறகு கண்டெடுக்கும் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்திருக் கலாம்.
சமந்தாவின் தோழியாக வரும் அருவி அதிதி பாலன் மூலம் சில கிளைக் கதைகள் வேகமாக சொல்லப்படுகிறது.
படத்தினn கிராபிக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தி இருந்து இருக்கலாம் .
படத்தின் பிரதான அம்சம் பிரமாண்டமான கலை நுணுக்க மான அரங்குகள் அதை தேவை யான அளவுக்கு செய்திருக் கிறார்கள்.
பாகுபலி படத்துக்கு இசை அமைத்து ஆஸ்கார் வென்ற மணிசர்மாவின் இசை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறது
சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு குளுமை. இமயமலைச் சாரல் பனி முகடுகளில் வெண்பனியை கண்களுக்குள் அள்ளிப் பரப்பி இதமளித்திருக்கிறார். சில காட்சிகள் ஓவியமாக கண்களில் பதிகிறது.
சாகுந்தலம் – அறிய வேண்டிய புராண காதல் படம்.