Thursday, April 25
Shadow

சைத்தான் திரைவிமர்சனம் ரேங்க் (4 /5)

படம் வெளியாகும் முன்னே படத்தின் பல நிமிடங்கள் வெளியாகி மக்களை பெரிதும் கவர்ந்து உள்ளது அதே போலவே முழு படமும் இருக்கு அதிலும் முதல் பாதி பிரமாதம் இடைவெளி சமயத்தில் உள்ள காட்சிகள் ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் திருப்தி செய்யும் விதமாக அறிமுக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெளிவாக செய்து உள்ளார்

நடிகர் விஜய் ஆன்டனி தனது நடிப்பு திறமையை நன்றாகவே வளர்த்து வருகிறார் என்பதற்கு சைத்தான் படம் நல்ல சான்றாகவே உள்ளது

விஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்.

அப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.

மேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது.

இதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் பின் என்ன ஆனது, ஜெயலட்சுமி யார் என்பதே மீதிக்கதை.

படத்தின் இரண்டாம் பாதி சைக்கோ த்ரில்லரிலிருந்து வேறு ஒரு களத்தில் பயணிக்கின்றது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேகமாக சென்றிருக்கலாமோ என நினைக்க வைக்கின்றது.

கிளைமேக்ஸில் விஜய் ஆண்டனிக்குள் ஏற்படும் மாற்றம் அதன்பின் அவர் செய்யும் வேலை என அனைத்தும் கமர்ஷியல் ஆடியன்ஸை கவரும் வகை. இசையும் அவரே என்பதால் மிரட்டியுள்ளார்.

Leave a Reply