தமிழ் சினிமாவுக்கு என்று எப்பவும் ஒரு செண்டிமெண்ட் இருக்கு எதிர்மறையான டைட்டில் வைப்பதுக்கு யோசிப்பார்கள் அனால் விஜய் அன்டனி தன படங்களுக்கு அப்படி தான் வைப்பார் அதில் வெற்றியும் கண்டவர் இதை இப்ப அவர் தொடர ஆரம்பித்துவிட்டார்.பிச்சைகாரன் சைத்தான் எமன் இப்படி அடுத்த படம் சைத்தான்
பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான்.
இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 16-ம் தேதி மாலை 6.30 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது. மேலும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. பிரபல ஆரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.