Saturday, June 3
Shadow

சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் மேஜிக் டச்சான ‘அஸ்வின்ஸ்’ ஜூன் 9 அன்று தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது

*சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் மேஜிக் டச்சான ‘அஸ்வின்ஸ்’ ஜூன் 9 அன்று தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது*

‘அஸ்வின்ஸ்’ படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது. நல்ல கதையம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. திறமையான கலைஞர்களைக் கொண்டுள்ள இந்தப் படம் ஏற்கனவே வர்த்தக வட்டாரங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிக்ஸ் திரையரங்குகளுக்குப் பிந்தைய OTT உரிமையைப் பெற்றபோது ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டது படம் இன்னும் பல புதிய உயரங்களை அடைய உதவியது. தற்போது தமிழக திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி பெற்றுள்ளதால், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படத்தை ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் காணத் தயாராகுங்கள்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் பின்னணியில் உள்ள பவர்ஹவுஸான பி.சக்திவேலன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவுடன் ‘அஸ்வின்ஸ்’ படத்திற்காக இணைந்துள்ளார். புகழ் பெற்ற தயாரிப்பாளர் BVSN பிரசாத், தயாரிப்பு மற்றும் விநியோகத் துறையில் சக்திவேலனின் செல்வாக்கு மிக்க இருப்பை அங்கீகரித்து மகத்தான மரியாதையை வெளிப்படுத்துகிறார். பல படங்களின் வெற்றிக்கு அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பால், சக்திவேலனின் கோல்டன்-டச் ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தை புதிய உயரத்திற்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*நடிகர்கள்:* வசந்த் ரவி, விமலா ராமன், ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படப்புகழ் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் (‘நிலா காலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர்) மற்றும் மலினா.

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இதற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். எட்வின் சாகே ஒளிப்பதிவையும், வெங்கட் ராஜன் படத்தொகுப்பையும் கையாள்கிறார்கள்.

இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்குகிறார். பிரவீன் டேனியல் இணைந்து தயாரித்துள்ளார் மற்றும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார்.

*Sakthi Film Factory’s magic touch brings ‘ASVINS’ to TN theatres on June 9*

Get ready for an exhilarating ride as Sakthi Film Factory acquires the Tamilnadu theatrical rights for ‘Asvins’! Set to release on June 9, this content-driven film, crafted by vibrant minds and featuring promising performers, has already ignited a sensation across trade circles. ‘Asvins’ made the headlines when Netflix acquired the post-theatrical OTT rights, while the mesmerizing teaser revealed by National award-winning actor Dhanush pushed the film’s reach to new heights. Now, with Sakthi Film Factory securing the Tamil Nadu theatrical rights, the anticipation has reached a fever pitch. Brace yourself for the cinematic extravaganza of ‘Asvins’ on June 9, as it promises to deliver a unique and unforgettable experience that will leave you spellbound.

A game-changing collaboration unfolds as B. Sakthivelan, the powerhouse behind Sakthi Film Factory, joins forces with Sri Venkateswara Cine Chitra for ‘Asvins’. Acclaimed producer BVSN Prasad expresses immense honour, recognizing Sakthivelan’s influential presence in the production and distribution industry. With his invaluable contribution to the success of many films, Sakthivelan’s Golden-Touch is expected to elevate ‘Asvins’ to new heights.

The star-cast of Asvins include Vasanth Ravi, Vimala Raman, Muralidaran (known for his role in “Rocketry: The Nambi Effect”), Saras Menon, Udhaya Deep (a National Award-winning actor for “Nila Kalam”), and Malina.

The film is a supernatural thriller with lots of spine-shuddery horror elements that features a musical score by Vijay Siddharth, cinematography by Edwin Sakay, and editing by Venkat Raajen.

The movie is produced by BVSN Prasad of Sri Venkateswara Cine Chitra (SVCC), presented by Bapineedu B, co-produced by Praveen Daniel, and directed by debutant Tarun Teja.