தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த த்ரிஷா தற்போது படவாய்ப்பு சரியாக இல்லை என்று தான் சொல்லணும் இதனால் த்ரிஷா தான் பிஸியாக இருப்பதாக காமிக்க இனி நான் நடிக்கும் படங்கள் என்னக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் தான் நடிப்பேன் என்று சொல்லி வருகிறார். தற்போது நடித்த நாயகி படத்தில் சம்பள பாக்கி வேறயாம் என்னத்த சொல்ல இந்த மாதம் ரிலீஷ் ஆகும் நாயகி தான் த்ரிஷாவுக்கு கை கொடுக்க வேண்டும் .
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் த்ரிஷா பிசியாக நடித்து வந்தபோது தமிழ் சினிமாவில் அவரது கால்சீட் மேனேஜராக அவரது அம்மா உமா கிருஷ்ணனே இருந்தார். ஆனால் தெலுங்கில் கிரிதர் என்பவர் திரிஷாவின் கால்சீட் மேனேஜராக இருந்தார். அவர்தான் த்ரிஷா நடித்த நாயகி படத்தை தயாரித்தார்.
கோவி என்பவர் இயக்கிய அப்படம் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அப்படத்தின் தமிழ்ப்பதிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதன்காரணமாக, த்ரிஷாவுக்கு நாயகி தயாரிப்பாளர் கிரிதர் பேசியபடி சம்பளத்தை கொடுக்கவில்லையாம். ஒரு சிறிய தொகையை மட்டுமே கொடுத்தவர், தமிழில் படத்தை வெளியிட்டதும் மீதமுள்ள சம்பள பாக்கியை தருவதாக கூறியிருக்கிறாராம்.
அதனால் அதையடுத்து தான் கதையின் நாயகியாக நடித்து வரும் மோகினி படத்திலும் தனக்கு சம்பளம் தராமல் டீலில் விட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே சம்பளத்தை வாங்கி நடித்துக்கொண்டிருக்கிறாராம் த்ரிஷா.