
தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார். அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்படுகிறது.
இதுவரை இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, தற்போது இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் இதைதொடர்ந்து இவர்களது திருமணம் டிசம்பரில் நடைபெறும் எனவும் கூறப்பட்டது.
இதுகுறித்து அண்மையில் பேசிய நாக சைதன்யா, ” எனது திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். திகதியை எனது தந்தை அறிவிப்பார். வேறேதும் என்னிடம் கேட்காதீர்கள்” என்றார்.