பொதுவாக நடிகர்களிடம் போட்டி பொறாமை இருக்கும் இப்ப அது நடிகைகளிடமும் ஆரம்பித்துள்ளது என்று தான் சொல்லணும் நடிகைகள் குள் ஒரு ஒற்றுமை இருந்துது அதை இப்ப நயன்தாரா அதற்கு மாறாக ஆரம்பித்துள்ளார்.
ஹீரோயின்கள் மத்தியில் நட்பு போக்கு நிலவி வந்த நிலையில் திடீரென்று போட்டி மனப்பான்மை அதிகரித்துள்ளது. அனுஷ்கா, சமந்தா, பிரியா ஆனந்த் போன்றவர்கள் தனது படங்களில் மற்றொரு கதாபாத்திரம் இருக்கும் பட்சத்தில் அதில் நடிக்க தோழி நடிகைகளை சிபாரிசு செய்து வந்தனர். நித்யா மேனன், பிரணிதா, விசாகா சிங் போன்றவர்கள் அதுபோல் சில படங்களில் வாய்ப்பு பெற்றனர். சம அந்தஸ்திலிருக்கும் ஹீரோயின் களுக்குள் ஒருபுறம் நட்பு இருந்தாலும், மறுபுறம் போட்டி தொடர்கிறது.
நயன்தாரா, திரிஷா தோழிகளாக பழகினர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்து நடிக்கவிருந்தனர். சம்பள விஷயத்தில் வித்தியாசம் ஏற்பட்டதால் திரிஷா நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் அப்படம் பெண்டிங்கில் வைக்கப்பட்டது. தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் கைவசம் படம் இல்லை. மீண்டும் தனது மார்க்கெட்டை அங்கு நிலைநாட்ட எண்ணி உள்ளார். அஜீத் நடித்த ‘வேதாளம்’ படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க உருவாகிறது. நேசன் இயக்கு கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க சமந்தாவிடம் பேசப்பட்டது. அவர் ரூ. 2 கோடி சம்பளம் கேட்டாராம்.
குறைக்கும்படி கேட்டபோது மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டனர். அவரும் தனது சம்பளத்தை ரூ. 2 கோடிக்கு மேல் கேட்டாராம். சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி கேட்டபோது ஓ.கே சொல்லிவிட்டாராம். ஒன்றரை கோடிக்கும் குறைவாக சம்பளம் பெற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமந்தாவை ஓரம்கட்டவே நயன்தாரா சம்பளத்தை குறைக்க ஒப்புக்கொண்டாராம். பட தரப்பில் விசாரித்தபோது நயன்தாராவை இன்னும் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யவில்லை என்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மத்தியில்தான் தொடங்க உள்ளது.