Friday, January 17
Shadow

சிவகார்த்திகேயன் படத்தை முடித்த சமந்தா

‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிது. `சீமராஜா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதில் சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.