Wednesday, April 23
Shadow

மனம் உடைந்து சமந்தா எடுத்த புது முடிவு

நடிகை சமந்தா கல்யாணத்தில் பல ட்விஸ்ட் பாத்தோம் திருமனத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார் ஆனால் திடீர் என்று படங்கள் நடிக்க முடிவெடுத்தார் அதற்க்கு காரணம் கல்யாணம் அடுத்த ஆண்டு அது மட்டும் இல்லமால் திருமணத்துக்கு பிறகும் சமந்தாவை நம்ம சினிமால பார்க்கலாம் ஆனால் தற்போது சமந்தா மனம் உடைந்தத்துக்கு காரணம் என்ன தெரியுமா .

விஜய்யுடன் கத்தி, தெறி, சூர்யாவுடன் 24, விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள, தனுசுடன் தங்கமகன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா, மீண்டும் தனுசுடன் வடசென்னை படத்தில் நாயகியாக கமிட்டாகியிருந்தவர், நாக சைதன்யாவுடனான திருமண செய்திகள் வெளியானதை அடுத்து வடசென்னையில் இருந்து விலகினார். அதனால் அப்படத்தில் சமந்தா நடிக்கயிருந்த வேடத்திற்கு அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு, சமந்தா நடித்த ஜனதா கேரேஜ் படம் வெளியாகி ஹிட்டடித்தது. அதனால் ஜனதா கேரேஜ்தான் சமந்தாவின் கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிக்கும் இரும்புத்திரை மற்றும் சிவகார்த்திகேயனின் புதிய படமொன்றிலும் மீண்டும் கமிட்டாகியிருக்கிறார் சமந்தா.

மேலும், தற்போது மீடியா பேட்டிகளிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இனிமேல் நான் எந்த படத்தையும் முதல்நாள் தியேட்டருக்கு சென்று பார்க்க மாட்டேன் என்று திடீரென அறிவித்துள்ளார். எதற்காக இந்த முடிவு? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, நான் நடித்த தெறி, ஜனதா கேரேஜ் ஆகிய படங்கள் வெளியான முதல்நாளே தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அப்போது என்னுடன் படம் பார்த்தவர்கள் படம் சரியில்லை, ஓடாது என்றார்கள். அதனால் நான் மனசுடைந்து விட்டேன்.

ஆனால் அப்படி அவர்கள் சொன்ன அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. அதன்காரணமாக இனிமேல் தான் நடிக்கிற படங்களை முதல்நாள் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்துள்ள சமந்தா, மற்றவர்களின் கருத்துக்களை நம்பக்கூடாது என்றும் முடிவெடுத்துள்ளாராம்.

Leave a Reply