Friday, October 11
Shadow

நல்ல கதைக்கு காத்திருக்கும் சமந்தா

இந்த வருடத்தில் ‘தெறி’, ‘24’ என மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்தவர் சமந்தா. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமானவர் தற்போது எந்த படங்களுமே ஒப்புக்கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதனாலேயே தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் சமந்தா ஒதுங்கியே இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சமந்தாவோ, கோலிவுட்டில் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைக்காததாலேயே எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. எனக்கு நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், எனக்கு ஏற்ற மாதிரியான கதை அமையவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

சமந்தா, இப்போதைக்கு தனது கைவசம் சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு படவுலகிலும் இந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த சமந்தா, அங்கேயும் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply