தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் பிஸி மட்டும் இல்லாமல் இந்த இரண்டு மொழிலும் நம்பர் 1 இடத்தை தக்கவைதுல்லவர் என்றால் அது சமந்தா அவரின் திருமணத்தை பற்றி பல வதந்திகள் கிளம்பியது அதற்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு அவரின் மாமனார் நாகர்ஜுனா நேற்று ஒரு நிகழ்ச்சியில் தன் அறிவிப்பை வெளியிட்டார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவிற்கும், தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவிற்கும் நடக்க உள்ள திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
நாகார்ஜுனா தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் – முன்னாள் தமிழ், தெலுங்கு நடிகையான சிவரஞ்சனி ஆகியோரின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் ‘நிர்மலா கான்வென்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“ஒரு நல்ல நாளில் நான் அனைத்தையும் வெளிப்படையாக விவரமாகச் சொல்கிறேன்,” என பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். சமந்தா ஏற்கெனவே நாக சைதன்யா குடும்பத்தினருடன் விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். அவரை இப்போதே தங்கள் வீட்டுப் பெண்ணாக நாகார்ஜுனா குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதே போல நாகார்ஜுனா – அமலா தம்பதியினரின் மகனான அகில், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிஸினஸ்மேனின் மகளைக் காதலிப்பதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.
தற்போது நாக சைதன்யா, அகில் ஆகியோரது திருமணங்கள் ஒரே நாளில் நடக்குமா அல்லது முதலில் நாக சைதன்யாவுக்குத் திருமணம் நடக்குமா என டோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். போகிற வேகத்தைப் பார்த்தால் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்க சம்மதித்துள்ள படத்திலிருந்து விலகிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.