
இன்று பாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவை உலகம் திரும்ப வைத்துள்ளார் இயக்குனர் ராஜ மௌலி இதன் தொடர் நம் தமிழ் இயக்குனர் சுந்தர் .C உலக சினிமா பக்கம் திரும்ப வைக்க செய்யும் முயற்சி தான் சங்கமித்திரா திரை படம் என்று சொன்னால் மிகையாகது. இதுவரை உள்ளத உழைப்பை போட்டு வரும் சுந்தர் .C இந்த படத்துக்காக கதை மற்றும் திரைகதை வேலைகள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் உழைத்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான்.
ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் டைட்டில் ரோலில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் கான்ஸ் விழாவில் வெளியானது. அதில் ஸ்ருதி ஹாசனின் கெட்டப்பும் ஜெயம் ரவியின் லாங் ஷாட் புகைப்படமும் வெளியானது.
இந்நிலையில் தற்போது படக்குழுவினர் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியின் கெட்டப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.