Saturday, December 14
Shadow

சந்தனத்துக்கு வந்த திடீர் ஆசை தான் ‘ஓடி ஓடி உழைக்கணும்’

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வி.டி.வி கணேஷ் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்துக்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என பெயரிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ இயக்குநர் மணிகண்டன் இயக்கவிருக்கிறார். அமைரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரோபோ சங்கர், ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் மணிகண்டன் “முழுக்க முழுக்க நகைச்சுவை படம் இது. இதுவரை சில படங்களில் சந்தானம் ஒரு சில காட்சிகளில் போலீஸ் வேடத்தில் சந்தானம் நடித்திருப்பார். ஆனால் போலீஸ் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை.

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ எப்படி அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக இருந்ததோ அதே போல் இந்த படமும் மக்களுக்கு பிடித்த காமெடியாகவும், ஆக்‌ஷன் படமாகவும் இருக்கும். எம்ஜி.ஆரின் வரவேற்பு பெற்ற பாடலான ‘ஓடி ஓடி உழைக்கனும்’ என்ற தலைப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதில் பெருமை” என்று தெரிவித்திருக்கிறார்.

நவம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தை வாசன் பிரதர்ஸ், சிவஸ்ரீ பிக்சர்ஸ் மற்றும் வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறார்கள்.

Leave a Reply