Monday, April 21
Shadow

ராஜேஷின் இயக்கத்தில் ஹீரோவாகும் சந்தானம்

ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்கு பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு. முதல் இரண்டு படத்தில் கைநழுவிய வெற்றியை இதில் எப்படியாவது பிடித்தே தீருவது என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி, கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் என ஒரு பட்டாளத்தையை களத்தில் இறக்கி இருக்கிறார்.

கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரே ஒரு விசயம் பாக்கி இருக்கிறது. அது ராஜேஷ் படத்துக்கே உரிய ஸ்பெஷல். அவருடைய எல்லா படத்துலேயும் ஒரு முக்கியமான ஹீரோ கிளைமாக்ஸில் எண்ட்ரி கொடுத்து பிரச்சினையை முடித்து வைப்பார்.

சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா வந்தார், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவா வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் மீண்டும் ஆர்யா வந்தார். இப்படி அவரது படங்களில் சிறப்பு தோற்றத்தில் ஹீரோக்கள் வருவார்கள்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சந்தானம் வருவார் என்று தெரிகிறது. இதற்காக ராஜேஷ், சந்தானத்திடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டிருக்கிறார். அவர் இப்போது ஹீரோவாகி விட்டதால் அந்த வாய்ப்பு. இந்தப் படத்துக்கு பிறகு ராஜேஷின் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கலாம் என்கிறார்கள்.

Leave a Reply