
மோகன்லால், அமலாபால் நடிக்க லைலா ஓ லைலா என்ற மலையாளப்படம் கடந்த வருடம் வெளியானது.
ஜோஷி இயக்கிய லைலா ஓ லைலா படத்தை நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை முருகவேல் என்ற பெயரில் தமிழ் பேச வைக்கிறார்..
சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், கஞ்சா கருப்பு, பப்லு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சத்யராஜ் இந்த படத்தில் தொழிலதிபராகவும், தீவிரவாதிகளை ஒழிக்க அரசால் புதிதாக ஏற்படுத்தபட்ட சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.
அமலாபால் இந்த படத்தில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கஞ்சாகருப்பு ஆட்டோ ஓட்டுனராக நடித்திருக்கிறார்.