தில்லுக்கு துட்டு படத்திற்கு பிறகு சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் சர்வர் சுந்தரம். மராட்டிய நடிகை வைபவி ஷந்திலியா ஹீரோயின். பிஜேஷ், ஆனந்தராஜ், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்பட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் பால்கி இயக்கி உள்ளார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இசை கோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால் இந்தப் படத்தையும் வாங்க விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி நிலுவுகிறது.
தயாரிப்பாளர் தனித்தனி ஏரியாவாக விற்கலாமா, தமிழ்நாடு முழுமைக்கும் ஒருவரிடமே கொடுத்து விடலாமா என்று யோசித்து வருகிறார்.
படத்தின் பாடல் வெளியீட்டு உரிமத்தை திங் மியூசிக் நிறுவனம் வாங்கி உள்ளது. படம் தீபாவளிக்கு முன்னதாக வெளிவரும் என்று தெரிகிறது.