Tuesday, October 8
Shadow

ஷாருக்கானுக்கு மும்பை ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் வெளிவர இருக்கும் படம் தான் ஜவான்.

உலக சினிமா ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் இந்த படத்தின்  வெளியீட்டை திருவிழா போல கொண்டாட உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் இணையதளங்களில் டிரண்டி ஆகிகொண்டு இருக்கிறது. இதுவரை இல்லாத சாதனையை இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சாதித்து வருகிறது.

இந்த நேரத்தில் ஷாருக்கான் ரசிகர்கள் மேலும் ஒரு புதிய விஷயம் மூலம் ஷாருக்கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளனர். மும்பையில் ஒரு சுவற்றில் மிக பிரமாண்ட ஜவான் படத்தின் ஓவியம் வரைந்த ரசிகர்கள் மத்தியில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ஷாருக்கானுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளது. ரிலிஸ்க்கு இன்னும் 22 நாட்கள் உள்ள நிலைமையில் இப்போதே ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க ஆரம்பித்து உள்ளனர்.