சிகை – திரைவிமர்சனம் (அழகு) Rank 3.5/5

share on:

இந்த ஆண்டின் துவக்கமே அற்புதமான திரில்லருடன் ஆரம்பம் அதுவும் தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான திரைகளம் அற்புதமான திரைகதை சிறப்பான சிறந்த நடிகர்கள் இப்படி ஒரு நல்ல படம் தான் இந்த ஆண்டின் துவக்கத்திலே வந்து இருக்கும் படம் சிகை ஆனால் ஒரு சின்ன குறை என்னவென்றால் வெள்ளி திரையில் வெளியாகாமல் டிஜிட்டல் பிளாட்பாரம் ஜீ 5யில் வெளியாகிறது அது தான் இருந்தும் இதுவும் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம்

இந்த படத்தை பொருத்தவரைக்கும் படத்தின் கதையும் திரைகதையும் தான் ஹீரோ கதிர், ராஜ் பரத்,மீரா நாயர்,ரித்விகா,மயில்சாமி,மற்றும் பலர் நடிப்பில் நவீன் குமார் ஒளிப்பதிவில் ஜகதீசன் சுப்பு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் சிகை .

இந்த படத்தின் கதை என்பது விலைமாதுகள் பற்றியும் திருநங்கை பற்றியும் தான் அவர்களின் உணர்வுகள் அவர்களின் வாழ்கையில் இருக்கும் கஷ்டங்களை மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் அதோடு அதில் அழகான கதையை மிகவும் விருவிருபான கதை மற்றும் திரைகதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்

விலைமாது புரோக்கராக ராஜ் பரத் அற்புதமான கதாபாத்திரம் மனித நேய மிக்க ஒரு கதாபாத்திரம் தன்னிடம் இருக்கும் பெண்களை துன்புறுத்தினால் அவர்களை மீண்டும் அதே பார்ட்டிக்கு அனுப்பமாடான் அப்படி ஒரு கதாபாத்திரம் நிம்மியாக நடிக்கும் மீரா நாயர் இவரை புது பார்ட்டிக்கு அனுப்புகிறார் போன பெண் திரும்பவில்லை இதனால் பதற்றம் அடைந்து தேடுகிறார் அனுப்பிய பார்டி வீட்டுக்கு போனால் அங்கு அந்த நபர் யாரோ கொலை செய்து ரத்த வெள்ளத்தில் இருக்கிறார்.

ஆனால் நிம்மியை காணவில்லை தேடுகிறார்கள் நிம்மி எங்கே என்பது கேள்வி குறியாக தேடுகிறார் ராஜ் பரத் அவருடன் நிம்மியை அழைத்து சென்ற கார் ட்ரைவர் மயில்சாமியுடன் நிம்மி என்ன ஆனார் யார் நிம்மி சென்ற பார்ட்டியை யார் கொலை செய்தார்கள் என்பது தான் மீதி கதை

ப்ரோக்கராக நடித்து இருக்கும் ராஜ் பரத் மிக சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் மிஸ்கின் படம் மூலம் அறிமுகமான ராஜ் பரத் படத்துக்கு மிகவும் பக்கபலமாக இருக்குகிறார் இந்த கதாபாத்திரத்தை இயக்குனர் மிக அற்புதமாக சித்தரித்துள்ளார். அதற்கு உயிர் கொடுத்துள்ளார் ராஜ் பரத்

நிம்மியாக வரும் மீரா நாயர் அழகு அதோடு அற்புதமான நடிப்பு ஒரு விலைமாது கதாபாத்திரத்தை மிக அற்புதமாக தன் பாவத்திலே காண்பித்துள்ளார்.

ராஜ் பரத் காதலியாக வரும் ரித்விகா இவரும் விலைமாது தான் இருந்தும் நேர்த்தியான கதாபாத்திரம் சின்ன பாத்திரம் அற்புதமான நடிப்பில் அழகு சேர்த்து இருக்கிறார் .

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் கதிர் திருநங்கையாக நடித்துள்ளார் இவரின் கதாபாத்திரத்தை சொல்லிவிட்டால் இந்த படம் பார்க்கும் சுவாரிசம் குறைந்து விடும் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் இவர் நிச்சயம் பிடிப்பார் அப்படி ஒரு நடிப்பு ஒரு திருநங்கையாக மிக அற்புதமாக நடித்துள்ளார் இந்த கதாபாத்திரம் நடிக்க நிச்சயம் துணிவு வேண்டும் அதை அருமையாக செய்துள்ளார்.

மயில்சாமி நிம்மியை காரில் அழைத்து செல்லும் கால் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரம் இவரை பற்றி நாம் சொல்லவா வேண்டும் படத்தின் மிக பெரிய பலம் என்று தான் சொல்லவேண்டும்.

இயக்குனர் ஜகதீசன் சுபு இந்த படத்தின் கதையை மிக நேர்த்தியாக அமைத்துள்ளார் அதோடு தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புது விதமான கதை அதை மிகவும் அற்புதமான திரைக்கதையின் மூலம் அழகு சேர்த்து இருக்கிறார் .இப்படி பட்ட ஒரு நல்ல படம் திரைக்கு வரமால் ஆன் லின்யில் ரிலிஸ் என்பது தான் வருத்தம் இருந்தும் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்

மொத்தத்தில் இந்த சிகை அழகு