
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடத்துள்ள படம் கோடி இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த விஷயமே இதில் தனுஷ்க்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுபமா ஜோடியாக நட்துள்ளனர். இந்த படம் ஒரு அரசியல் கதையாக அமைந்துள்ளது இந்த மாதிரியான கதையில் தனுஷ் நடிப்பது முதல் முறை அது மட்டும் இல்லாமல் இரட்டை வேடமும் முதல் முறை இந்த படம் ரிலீஸ் ஆனால் தனுஷ் தன் சினிமா வாழ்கையில் அடுத்த லெவலுக்கு போவார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க படுகிறது .இந்த படத்தின் கதை படி தனுஷ் ஒரே பிரசவத்தில் பிறந்த ரெட்டை குழந்தையாம்
இது போல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதாவன் படத்திலும் சிம்பு ஒரே நேரத்தில் ஒட்டி பிறந்த இரட்டையர் பிறவி கதையாம் அப்பாவாக நடிக்கும் அஸ்வின் தாத்தாவுக்கும் அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயாவுக்கும் பிறக்கும் அண்ணன் தம்பியாக நடிக்கிறார் சிம்பு இதில் சிம்பு நடிக்கும் மதுரை மைக்கல் கதாபாத்திரம் படபிடிப்பு முடிவடைந்துள்ளது.இரட்டையில் ஒருவரான இன்னொரு சிம்பு கதாபாத்திரம் படபிடிப்பு நடத்த முடிவெடுத்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இதில் தனுஷ் தான் முதலில் கோடி படத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .