ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இதில் ‘மதுரை மைக்கேல்’ கதாபாத்திரத்தில் படப்பிடிப்பு முடிந்து டீஸரை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து தற்போது ‘அஸ்வின் தாத்தா’ கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
‘அஸ்வின் தாத்தா’ கதாபாத்திரத்துக்காக உடல் எடையை சுமார் 93 கிலோவுக்கு அதிகரித்திருக்கிறார். இக்கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், மற்றொரு இளம் வயது கதாபாத்திரத்துக்காக சுமார் 18 கிலோ எடையைக் குறைக்க இருக்கிறார்.
உடல் எடையைக் குறைக்க சுமார் ஒரு மாதம் படக்குழு அளிக்கவிருக்கிறது. உடல் எடையை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை கேட்டு வருகிறார் சிம்பு.