Wednesday, December 1
Shadow

தர்பார் படத்தில் பாடுவதை உறுதி செய்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ரஜினி நடித்து வரும் படம் தர்பார் படத்தின் ஓபனிங் பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளது உறுதியாகியுள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

மும்பை பகுதியில் 2 மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினியின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் அதிக பாதுகாப்பு போட்டுள்ளனர். ரஜினிகாந்த் படங்களில் அறிமுக பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வந்தது. ஆனால் ரஞ்சித் இயக்கிய முந்தைய 2 படங்களில் அவரை பாட வைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது.

இப்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு அறிமுக பாடல் ஒன்று இருப்பதாகவும் அதை நான் பாடி இருக்கிறேன் என்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.

CLOSE
CLOSE