
முயற்சி திருவினையாக்கும் என்ற வார்த்தைக்கு எடுத்துகாட்டு என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லவேண்டும் டிவி தொகுப்பாளராக தன் கலை உலகை வாழ்கையை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் படி படியாக தன்னை உயர்த்தியவர் .என்று சொன்னால் மிகையாகது .
மெரினா படத்தில் அறிமுகமானபோது சிவகார்த்திகேயனை ஒரு தொகுப்பாளராகவேதான் சினிமா உலகமும் பார்த்தது. ஆனால், அதன்பிறகு அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களை அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்தபோது கவனிக்கப்படும் முக்கியமான நடிகராகி விட்டார்.
ரஜினிமுருகனுக்குப்பிறகு வியாபாரரீதியாக முன்னணி இடத்துக்கு வந்தார். அதையடுத்து அவர் நடித்த ரெமோ படம் முதன்முறையாக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரானது. அதோடு அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக பெண் வேடத்திலும் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அப்படி அவர் நடித்துள்ள ரெமோ படத்தை 50 கோடி வரை வியாபாரம் செய்து விடவேண்டும் என்பதுதான் சிவகார்த்திகேயனின் டார்கெட்டாக இருந்தது. அதை முன்வைத்தே வியாபாரமும் பேசப்பட்டு வந்தது. ஆனால், 50 கோடி கொடுத்து வாங்கினால் நாங்கள் கல்லா கட்ட முடியாது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறிவிட்டார்களாம். அதனால் இப்போது 35 கோடிக்கு ரெமோ வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். இருப்பினும், அடுத்தபடியாக மோகன்ராஜா இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தை 50 கோடிக்கு வியாபாரம் செய்து மெகா நடிகர் பட்டியலில் இடம் பிடித்து விட வேண்டும் என்பதை மனதில் கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.