Sunday, March 23
Shadow

அஜித் மற்றும் விஜய் இவர்களை ஓவர் டேக் செய்த சிவகார்த்திகேயன்

பல நடிகர்கள் பல ஆண்டுகாலமாக இருந்தாலும் குறுகிய காலத்தில் ஒரு முக்கிய முன்னணி இடத்தை பிடித்த பெருமை அவரை சாரும் அஜித் விஜய் இவர்களுக்கு அடுத்த இடத்துக்கு இன்று வந்துள்ளார் என்றால் அது அவரின் உழைப்பு மட்டும் இல்லை அவரின் ரசனையும் தான் என்று சொல்லவேண்டும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதில் மிகவும் தெளிவாக புரிந்துகொண்டவர் அது மட்டும் இல்லை தனக்கு என்னவரும் தன் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கண்டுபிடித்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றி பெற்றவர் என்றால் அது சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். இப்படத்தில் முதல் முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சிவகார்த்திகேயனும் டூயட் பாடி இருக்கிறார்கள்.

படம் திட்டமிட்டபடி ஷூட்டீங்கை முடித்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபஹத் ஃபாஸில் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி அதிக பொருட்செலவில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் `வேலைக்காரன்’ படத்தின் வெளிநாட்டு வியாபாரமும் தொடங்கிவிட்டது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.11 கோடி வரை விற்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களே இதுவரை ரூ.10 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் ஒன்று அதிகளவில் வியாபாரம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறுகிறார்கள்.

Leave a Reply