Sunday, October 2
Shadow

கர்நாடகாவில் மிருகங்களில் நடுவில் மனிதன்

இன்று தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பெரும் பிரச்சினை என்றால் அது காவேரி நதி நீர் பிரச்சனை இது அரசியல்வாதிகளின் பிரச்சனை இரண்டு மாநிலங்களின் பிரச்சனை இதை கலை உலகதினர்கள் ஏன் தலையில் வைத்து ஆடுகின்றனர் என்று தெரியவில்லை அதுவும் தமிழ் நடிகர்கள் இல்லை அதை பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை அவர்களுக்கு தன் கல்லா நிறையணும் அவ்வளவுதான் ரசிகர்களை பற்றியும் கவலை கிடையாது மக்களை பற்றியும் கவலை இல்லாதவர்கள் இவர்களின் எண்ணம் அய்யோ கர்நாடகா வியாபாரம் போச்சே என்பது மட்டும் தான் ஆனால் அங்கு இருக்கும் கன்னட நடிகர்கள் எல்லாம் தன் வீட்டு பிரச்சினை போல் குரல் கொடுகிறார்கள் ஏன் நடிகைகள் முதல் அங்கு உள்ள தமிழன் என்ன ஆனார்கள் என்று கவலை இல்லை நாம் நடிகர்களுக்கு ஆனால் கன்னட நடிகர்களிலும் ஒரு மனுஷன் இருக்கிறான் என்பது மனசுக்கு சந்தோசம் இவரின் செயலாவது தமிழர்களை காபாற்றுமா என்று பொருத்து இருந்து பார்க்கலாம்

நேற்று நடந்த கன்னட நடிகர் சங்க பேராட்டத்தில் நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலுள்ளவருமான சிவராஜ்குமார், ஜெயலலிதாவை தாக்கி பேசக்கூடாது என மேடையில் வைத்தே வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும், பெண் என்பவர் பெண்தான். எனவே இப்படி தரக்குறைவாக பேசும் வேலையை வைத்துக்கொள்ளக்கூடாது. தமிழ்நாடு நமது பக்கத்து மாநிலம்தான். 1500 கி.மீ தொலைவிலுள்ள வேறு நாடு கிடையாது. நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை மனப்பான்மை நமக்கு வர வேண்டும்.

கர்நாடகாவை போலவே தமிழகத்திலும் விவசாயிகள் உள்ளனர். ஒரு விவசாயியின் கஷ்டம் மற்றொரு விவசாயிக்கு நன்கு தெரியும். எனவே இரு தரப்பும் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று முடித்தார்

Leave a Reply