Tuesday, November 17
Shadow

சோனி விழா அறிமுகப்படுத்தும் ‘இது நம்ம வைப்ஸ்’ – தமிழ்நாட்டின் தனித்துவமான உணர்வை கொண்டாடும் புதிய குரல்

சோனி விழா அறிமுகப்படுத்தும் ‘இது நம்ம வைப்ஸ்’ – தமிழ்நாட்டின் தனித்துவமான உணர்வை கொண்டாடும் புதிய குரல்

தமிழ்நாட்டின் மக்களையும், கலாச்சாரத்தையும், அன்றாட வாழ்க்கையின் அழகிய தருணங்களையும் கொண்டாடும் புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல் ‘சோனி விழா’ அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை, செப்டம்பர் 23, 2026:
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலான ‘சோனி விழா’வை அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற பிராண்ட் வாக்குறுதியுடன் உருவாகியுள்ள சோனி விழா, இன்றைய தமிழ்நாட்டை அதன் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், ஆசைகள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையின் வழியாக கொண்டாட உள்ளது.

உலகளவில் பிரபலமான பொழுதுபோக்கு வடிவங்கள், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் கதைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தில் ஆழமாக வேரூன்றிய அதே நேரத்தில் சமகாலத் தன்மையுடன் கூடிய பொழுதுபோக்கை வழங்க சோனி விழா தயாராகிறது.

‘இது நம்ம வைப்ஸ்’ என்பது தமிழ்நாட்டின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் சிறியதாய் தோன்றினாலும் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பல விஷயங்களில் வெளிப்படுகிறது. உணவு, இசை, உற்சாகமான உரையாடல்கள், ஒன்றாகக் கொண்டாடும் விழாக்கள் மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் அன்றாட தருணங்கள் என அனைத்தும் இதில் இடம்பெறுகின்றன. தமிழர்கள் கொண்டாடும் அனைத்தையும் பிரதிபலிக்கும் ‘விழா’ என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பரிச்சயமான அனுபவங்களை பிராண்ட் படம் பதிவு செய்கிறது.

உலகின் மிகவும் பிரபலமான இரண்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சி வடிவங்களை தமிழ் பார்வையாளர்களுக்காக மறுவடிவமைத்து தனது பயணத்தை சோனி விழா தொடங்குகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிகளில் சமந்தா ரூத் பிரபு தொகுத்து வழங்கும் ‘Celebrity MasterChef Tamil’ மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இடம்பெறும் ‘Tamil Idol’ ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றன. உலகளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி வடிவங்களையும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் முன்னணி பிரபலங்களையும் ஒரே மேடையில் இணைக்கும் இந்த இரண்டு நிகழ்ச்சிகள், சோனி விழாவின் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பயணத்திற்கான தொடக்கமாக அமைகின்றன.

ராஜராமன் சுந்தரம், தலைமை உள்ளடக்க அதிகாரி – தென் மண்டலம், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா கூறுகையில்:

“சோனி விழா ஒரு எளிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது — இன்றைய தமிழ்நாட்டை கொண்டாடுவது. தன்னம்பிக்கையுடன், சமகாலத் தன்மையுடன், தனது கலாச்சார வேர்களில் ஆழமாக பதிந்துகொண்டு, தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டை பிரதிபலிப்பதே எங்களது நோக்கம்.

‘இது நம்ம வைப்ஸ்’ என்பது தமிழ்நாட்டை தனித்துவமாக்கும் பல சிறிய விஷயங்களை பிரதிபலிக்கிறது — அதன் மக்கள், அவர்களின் அன்பு, பாரம்பரியங்கள் மற்றும் நம்மை ஒன்றிணைக்கும் அன்றாட தருணங்கள். பொழுதுபோக்கின் மீது அபாரமான அன்பும், உண்மையான தமிழ் உணர்வை மிகத் தெளிவாக உணரும் தனித்துவமும் கொண்ட பார்வையாளர்களை நாங்கள் சந்திக்கிறோம். இந்தப் பயணத்தை மிகுந்த பணிவுடனும் உற்சாகத்துடனும் தொடங்குகிறோம்.

புதுமையான, பொருத்தமான மற்றும் நமக்கு நெருக்கமான கதைகளையும் அனுபவங்களையும் வழங்குவதன் மூலம், பார்வையாளர்களின் வாழ்க்கையில் எங்களுக்கென ஒரு இடத்தைப் பெறுவோம் என நம்புகிறோம். சிறந்த திறமையாளர்களுடனும், உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சி வடிவங்களுடனும் தமிழ்நாட்டுடனான இந்தப் புதிய பயணத்தை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”

சோனி விழாவை அக்டோபர் 19, 2026 முதல் இரவு 8 மணி முதல் காணத் தவறாதீர்கள்!

Sony Vizha Unveils ‘Ithu Namma Vibe’, Celebrating the Distinctive Spirit of Tamil Nadu

New Tamil GEC from Sony Pictures Networks India to launch on October 19, 2026 at 8 PM

Chennai, September 23, 2026: Sony Pictures Networks India (SPNI) is all set to launch Sony Vizha, its much-awaited Tamil General Entertainment Channel (GEC), on October 19, 2026, at 8 PM. Built around the brand promise ‘Ithu Namma Vibe’, Sony Vizha aims to celebrate Tamil Nadu as it is experienced today — through its language, culture, traditions, aspirations and distinctive way of life.

Bringing together global entertainment formats, marquee talent and stories created for Tamil audiences, Sony Vizha will offer contemporary entertainment while staying deeply connected to Tamil Nadu’s cultural identity.

The essence of ‘Ithu Namma Vibe’ lies in the small yet instantly recognisable elements that make Tamil Nadu unique — its food, music, lively conversations, shared celebrations and everyday moments that bring people together. The channel’s brand film captures these familiar experiences through the lens of ‘Vizha’, celebrating everything that represents the spirit of Tamil Nadu.

Sony Vizha will begin its journey with two of the world’s most popular entertainment formats, specially reimagined for Tamil audiences. The opening line-up includes Celebrity MasterChef Tamil, featuring Samantha Ruth Prabhu, and Tamil Idol, featuring music maestro A.R. Rahman.

The two shows bring together globally celebrated formats and some of India’s most admired personalities, setting the tone for Sony Vizha’s ambitious entertainment offering.

Rajaraman Sundaram, Chief Content Officer – South Regional, Sony Pictures Networks India, said:

“Sony Vizha has been created with a simple ambition — to celebrate Tamil Nadu as it is today: confident, contemporary, rooted in its culture and constantly evolving. ‘Ithu Namma Vibe’ captures the many little things that make Tamil Nadu uniquely its own — its people, its warmth, its traditions and the everyday moments that bring us together.

We are coming to an audience with an extraordinary love for entertainment and a very strong sense of what feels truly Tamil, and we approach this journey with both humility and excitement. We hope to earn a place in their lives by bringing them stories and experiences that feel fresh, relevant and familiar.

With wonderful talent and some of the world’s most loved formats, we are excited to begin this journey with Tamil Nadu.”

Sony Vizha will premiere on October 19, 2026, at 8 PM.

Brand Film: The official Sony Vizha brand film is available on the channel’s social media platforms.