Sunday, September 8
Shadow

சூரகன் – திரைவிமர்சனம் Rank 2/5

 

இயக்குனர் சதீஷ் கீதா குமார் இயக்கத்தில் கார்த்திகேயன், சுபிக்‌ஷா, வின்செண்ட் அசோகன், நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “சூரகன்”.

தயாரிப்பாளரான கார்த்திகேயனே இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

நாயகன் கார்த்திகேயன் போலீஸ் பணியில் சஸ்பென்ஷனில் இருக்கிறார். இவருக்கு கண்ணீல் சிறிய மாற்றம் நிகழ்கிறது.

இந்த சூழலில் பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட, அவருக்கு உதவி செய்கிறார் கார்த்திகேயன்.

பிரபல அரசியல்வாதி ஒருவரும் கொல்லப்படுகிறார். அதன் பிறகு கதையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

தயாரிப்பாருன் நடிகருமான கார்த்திகேயன் தனது கதாபாத்திரத்திற்கு கூடுமானவரை உயிர் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ஓரளவிற்கு மட்டும் தான் அது கைகொடுத்துள்ளது. பெரிதான தாக்கத்தை அவரது நடிப்பு கொடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.

படத்தில் நடித்த மூத்த நடிகர்களை இன்னும் நன்றாகவே பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றியது.

படத்தின் பின்னணி இசை பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவு பலம்.. கார் சேஸிங் காட்சிகள் ஓகே ரகமாக கடந்து செல்கிறது.

கதை பலமாக அமைந்தாலும், அதை கொண்டும் செல்லும் விதத்தில் இயக்குனர் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இருந்தாலும்,

சூரகன் – ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு பாதி விருந்து தான்…