Sunday, September 8
Shadow

​விவாகரத்து பற்றிய செய்தி உண்மைதான்: சௌந்தர்யா அஸ்வின்

விவாகரத்து பற்றிய செய்தி உண்மையானதே என சௌந்தர்யா அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இருவருமே குடும்பத்தை அழகிய முறையில் நடத்தும் சிறந்த குடும்ப பெண்கள் தான்.

இந்நிலையில், ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் 2010ல் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த நான்கு மாதங்களாக இருவர்களுக்குமிடையே உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இவர்களுக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அவ்வாறு வெளியான செய்தி உண்மைதான், நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து தான் வாழ்கிறோம் எனவும், இது எங்கள் சொந்த வாழ்க்கை பிரச்சனை தயவு செய்து இதற்கு மரியாதை கொடுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply