
ரவி மோகன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் – 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் “தாம் தூம்”!
2000களில் இளைஞர்களை அதிகமாக கவர்ந்த காதல்-ஆக்ஷன் திரைப்படங்களில் முக்கிய இடம் பிடித்த படம் “தாம் தூம்”. தற்போது அந்த நினைவுகளை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு வர இந்த படம் ரீ-ரிலீஸாக திரையரங்குகளுக்கு வருகிறது.
நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு சிறந்த காட்சித் தரத்துடன் மற்றும் 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் திரைக்கு வர தயாராகியுள்ளது.
இந்த ரீ-ரிலீஸை Murugan Film Factory நிறுவனத்தின் சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டு வெளியான “தாம் தூம்”, வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட காட்சிகள், விறுவிறுப்பான ஆக்ஷன், மனதை கவர்ந்த காதல் தருணங்கள் ஆகியவற்றால் அந்த காலத்து இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் 2K தலைமுறையினரால் நினைவில் வைத்திருக்கும் படங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அவருடன் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. அந்நேரத்தில் வெளியான பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளன.
மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான இந்த படம், முழுமையான கமெர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. Mediaone Global Entertainment Limited மற்றும் Ayngaran International / Metro Film (P) Ltd நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தன.
18 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் தரத்தில் “தாம் தூம்” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து Murugan Film Factory நிறுவனம் மேலும் பல வெற்றி திரைப்படங்களையும் எதிர்காலத்தில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2000களின் சினிமா நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கு, “தாம் தூம்” ரீ-ரிலீஸ் ஒரு சிறப்பு திரை அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Special Surprise for Ravi Mohan Fans – “Dhaam Dhoom” Returns to Theatres After 18 Years!
One of the popular romantic action films that captured the attention of young audiences in the 2000s, “Dhaam Dhoom”, is all set to return to theatres. The film, starring Ravi Mohan in the lead role, is being re-released in a digitally enhanced format, bringing back nostalgic memories for fans.
The re-release is being presented by Murugan Film Factory, led by Kandasamy and Balasubramani, who are planning a grand release. Known for distributing several successful films in the Salem region, they also run the Grand Cinemas multiplex in Hosur.
Originally released in 2008, Dhaam Dhoom received a warm response from young audiences for its visually appealing international locations, thrilling action sequences, and memorable romantic moments. Even today, the film remains a nostalgic favorite among many from the 2K generation.
The film also marked the Tamil debut of Bollywood actress Kangana Ranaut as the female lead. The cast also includes Raai Laxmi, Jayaram, Bose Venkat, and Pithamagan Mahadevan in important roles.
Music composed by Harris Jayaraj was a major highlight of the film. Several songs from the soundtrack became chartbusters at the time and continue to be loved by fans.
Directed by the late cinematographer and filmmaker Jeeva, the film was crafted as a complete commercial entertainer. It was produced on a grand scale by Mediaone Global Entertainment Limited and Ayngaran International / Metro Film (P) Ltd.
After 18 years, Dhaam Dhoom is now being restored digitally and will be released again with 5.1 surround sound. The film is scheduled to re-release in theatres across Tamil Nadu, Kerala, and Karnataka on April 10.
Murugan Film Factory has also announced plans to re-release several more successful classic films in the future.
For fans of Ravi Mohan and movie lovers who wish to relive the cinematic memories of the 2000s, the re-release of “Dhaam Dhoom” promises to be a special theatrical experience.

