Wednesday, April 30
Shadow

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போகிறேன் – சரத்குமார்

நடிகர் சரத்குமார் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:
நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன்.நல்ல கதை நல்ல கதாபாத்திரங்களை தோ்வு செய்கிறேன்.வாழ்க்கையில் உயரவும் தாழ்வும் சகஜமானதுதான் .அது எல்லோருக்கும் ஏற்படும்.சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கிதான் ஆகும்.
ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன்.அதை இப்போது உணர்கிறேன்.

இப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து ஒரு படத்தில் நண்பர்களாக நடிக்கிறோம்.சண்முகம் முத்துசாமி இயக்குகிறார்.

இதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித்ராஜ்குமாரும் நானும் இணைந்து ராஜகுமாரா என்றபடத்தில் நடிக்கிறோம்.இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறேன்.இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன்.
இவ்வாறு அவர் கறைினார்.

நானும் ஜி.வி.பிரகாசும் இணைந்து நடிக்கும் படத்துக்கு அடங்காதே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று சரத்குமார் கூறினார்.

Leave a Reply