Tuesday, December 3
Shadow

ஸ்டுடியோ கிரீன் k.E.ஞானவேல் ராஜா வெளியிடும் கவுதம் கார்த்திக் – நிக்கி கல்ராணி நடிக்கும் “ ஹர ஹர மகாதேவகி “

ஸ்டுடியோ கிரீன் k.E.ஞானவேல் ராஜா வெளியிடும் கவுதம் கார்த்திக் – நிக்கி கல்ராணி நடிக்கும் “ ஹர ஹர மகாதேவகி “

ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் , ஹரி இயக்கத்தில் “ சி 3 “ ( S3) படபிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதையடுத்து சூர்யா நடிக்கும் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “ தானா சேர்ந்த கூட்டம் “ படபிடிப்பு இம்மாதம் ஆரம்பமாகிறது. மேலும் இவர் வெளியிடும் உரிமை பெற்ற படமாக புதிய படத்தின் பூஜை இன்று ( 06.11.16) நடந்தது. இப்படத்திற்கு “ ஹர ஹர மகாதேவகி “ என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க , அவரது ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் சதீஷ் , மொட்டை ராஜேந்திரன் , ரவி மரியா , நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை , கதை , திரைக்கதை , அமைத்து வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார். இவர் “எங்கேயும் எப்போதும்” டைரக்டர் சரவணின் உதவி இயக்குநர் ஆவார்.

இப்படத்துக்கு இசை பால : முரளி பாலு , ஒளிப்பதிவு : செல்வ குமார் , கலை : சுரேஷ் ( அறிமுகம் ) இவர் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் உதவியாளர். “ ஸ்லாப் ஸ்டிக் “ ( SlapStick ) காமெடியாக உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு வருகிற 23தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் நடைபெறும் இப்படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் தயாரிக்கிறார்.

Leave a Reply