சுல்தான்(கார்த்தி) பிறப்பதை முதல் காட்சியில் காட்டியிருக்கிறார்கள். சுல்தானின் தந்தை சேதுபதி (நெப்போலியன்), ஊரே பார்த்து நடுங்கும் ரவுடி. அவரிடம் ஏகப்பட்ட அடியாட்கள் வேலை செய்கிறார்கள்.
மோசமான ரவடியிடம்(கே.ஜி.எஃப். படம் புகழ் ராம்) இருந்து தங்களையும், நிலத்தையும் காக்குமாறு சில விவசாயிகள் சுல்தான் அப்பா நெப்போலியன் கிட்ட கேட்கிறார்கள் அவரும் உறுதியளித்து இறந்து விடுகிறார் இந்த நிலையில் அப்பாவின் அடிஆட்களுக்கு போலீஸ் மூலம் மிரட்டல் தன் அப்பாவின் அடியாட்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று முயற்சியும் அதே நேரத்தில் விவசாயிகளின் நிலத்தை மீட்டு கொடுக்க சுல்தான், இந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கிறார். அதை வைத்து அவர் தான் நினைத்ததை எப்படி சாதிக்கிறார் என்பது கதை.
ஏற்கனவே பார்த்த கதை தான் என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதம் புதிது. சுல்தான், ருக்மணி(ரஷ்மிகா மந்தனா) இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ரஷ்மிகா வரும் காட்சிகள் ரசிகர்களை கவர்கிறது. சுல்தான் மற்றும் அவரின் அண்ணன்கள் அந்த கிராமத்தில் தங்கி அதை பாதுகாக்க காதல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஹீரோவால் மட்டுமே அந்த ஊரை காப்பாற்ற முடியும் என்பது போன்று காட்டியுள்ளனர். சுல்தானுக்கு மட்டும் அல்ல கதைக்கும் வேட்டு வைப்பது வில்லன் தான். ஒரு சக்திவாய்ந்த வில்லனுக்கு பதில் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். இடைவேளை ஆக்ஷன் காட்சிக்கு பிறகு ஜெயசீலன் மிரட்டுகிறார் படததின் திரைகதைை படத்தை விறுவிறுப்பு செய்கிறது இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஒவ்வொரு காட்சிகளை மிகவும் கவனத்தோடு கையாண்டு இருக்கிறார். படம் முழுக்க நட்சத்திர கூ ட்டம் அதை மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் .
சுல்தானின் அண்ணன்களில் ஒருவரான அர்ஜய் தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமான வில்லனாக இருக்கிறார். ரவுடியிசம், விவசாயம், காதல் என்று அனைத்தும் கலந்து ஒரு பக்கா மசாலா படத்தை கொடுத்திருக்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
படத்தின் பிளஸ்:
கார்த்தியின் நடிப்பு, காதல் காட்சிகள் திரைக்கதை ரஷ்மிகா
படத்தின் மைன்ஸ்:
ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் பின்னணி இசை
மொத்தத்தில் சுல்தான் விவசாயிகளின் பாதுகாவலன்