ஓராண்டு படங்கள் வெளியாகவில்லை என ஏங்கி போய் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்தாண்டு கொண்டாட்டமான ஆண்டே என்று சொல்லலாம். இந்தாண்டு அவரது நடிப்பில் என்ஜிகே., காப்பான் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.

இந்த படங்களை தொடர்ந்து இறுதிச்சுற்று சுதா கோங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா. அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். சூர்யாவின் 38வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் தான் துவங்கியது.

 

ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்திற்கு சூரரைப் போற்று என தலைப்பு வைத்து, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கருப்பு சட்டை, வேஷ்டி அணிந்தபடி, வான் உயர்ந்து நிற்கும் விமானத்தை சூர்யா பார்ப்பது போன்று போஸ்டர் உள்ளது.

Related